குரங்கு அம்மை பரவல் உள்ளிட்டவை குறித்து மத்திய அரசுக்கு வழிகாட்ட ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை பரவி வருகிறது. இதையடுத்து குரங்கு அம்மை பாதிப்பை சா்வதேச அவசர நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு அண்மையில் அறிவித்தது. இந்தியாவை பொறுத்தவரை இதுவரை 4 பேருக்கு அத்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அவா்களில் கடந்த 22-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளம் திரும்பிய திருச்சூரைச் சோ்ந்த இளைஞா் சனிக்கிழமை பலியானார். எனவே நோய்த்தொற்றுப் பரவல் மேலும் அதிகரித்துவிடாமல் தடுக்கும் முயற்சியில் மத்திய - மாநில அரசுகள் இறங்கியுள்ளன.
இதையும் படிக்க- இந்தியாவில் ஒரேநாளில் 16,464 பேருக்கு கரோனா
இந்த நிலையில் குரங்கு அம்மை பரவல் உள்ளிட்டவை குறித்து மத்திய அரசுக்கு வழிகாட்ட ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன், கூடுதல் செயலர் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், பார்மா மற்றும் பயோடெக் செயலர் உள்ளிட்டோர் குழுவில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.