இந்தியா

என்.டி. ராமாராவின் இளைய மகள் தற்கொலை

DIN


ஹைதராபாத்: ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவின் இளைய மகள் உமா மகேஷ்வரி தற்கொலை செய்து கொண்டார்.

தெலங்கு தேசம் கட்சியின் நிறுவனரான என்.டி. ராமாராவின் இளைய மகள் உமா மேகேஷ்வரி, ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. என்.டி. ராமாராவுக்கு 12 பிள்ளைகள். அவர்களில் இளையவர் உமா மகேஷ்வரி.

தற்கொலை குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விரைந்து வந்த காவலர்கள், உடலைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

உமா மகேஷ்வரி, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி நாரா புவனேஸ்வரி மற்றும் மத்திய இணை அமைச்சரும் பாஜக தலைவருமான டகுபதி புரந்தேஸ்வரியின் சகோதரியாவார். 

என்.டி.ராமாராவுக்கு 8 மகன்கள், 4 மகள்கள். நான்கு மகள்களிலேயே உமா மகேஷ்வரிதான் இளையவர். தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த உமா மகேஷ்வரியின் மகளின் திருமணம் அண்மையில் வெகுச் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. அதில் அவரது குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்றுள்ளனர்.

1996ஆம் ஆண்டு தனது 72வது வயதில் மரணமடைந்த என்.டி. ராமாராவின் 8 மகன்களில் ஏற்கனவே மூன்று பேர் மரணமடைந்துவிட்டனர். 

கடந்த சில காலமாக உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை பெற்று வநத நிலையில் உமா மகேஷ்வரி இன்று தற்கொலை செய்து கொண்டிருப்பது அவரது குடும்பத்தினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT