பிரியாணி பிரியர்களின் கண்களில் ரத்தக் கண்ணீர்: ஹைதராபாத்தில் நடந்த ருசிகரம் 
இந்தியா

பிரியாணி பிரியர்களின் கண்களில் ரத்தக் கண்ணீர்: ஹைதராபாத்தில் நடந்த ருசிகரம்

ஹைதராபாத் நகரை கனமழை மூழ்கடித்திருந்த நிலையில், பிரியாணி பிரியர்களின் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

DIN


ஹைதராபாத் நகரை கனமழை மூழ்கடித்திருந்த நிலையில், பிரியாணி பிரியர்களின் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

ஒட்டுமொத்த ஹைதராபாத் நகரமே வெள்ளக்காடான நிலையில், பிரியாணி கடையொன்றில் சுடச்சுட பிரியாணி செய்து வைத்திருந்த இரண்டு பாத்திரங்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

கொட்டும் மழையில், வெள்ள நீரில் பிரியாணியுடன் மிதந்துச் சென்று அந்த பாத்திரங்களை விடியோ எடுத்த ஒருவர் அதனை டிவிட்டரில் பகிர, அது சுடச்சுட டிரண்டிங் ஆனது.

சிலர் தாங்கள் ஆர்டர் செய்த பிரியாணி கிடைக்காமல் போகப் போகிறது என்று இந்த விடியோவை இணைத்து தலைப்புப் போட்டிருந்தனர்.

இந்த விடியோ பதிவேற்றம் செய்யப்பட்ட சில மணி நேரங்களில் சுமார் 10 லட்சம் பேர் பார்த்துவிட்டனர். பலரும் தங்களது வருத்தத்தையும் பதிவு செய்திருந்தனர். 

இந்த நிகழ்வானது ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையின்போது, பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து நகரமே வெள்ளக்காடானது. அப்போது ஒரு மிகப்பெரிய பிரியாணி கடையில் பிரியாணி தயாரித்து வைத்திருந்த பாத்திரம், திடிரென கடைக்குள் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனை அங்கிருந்தவர்கள் விடியோ எடுக்க. அதில் ஒன்று டிவிட்டரில் டிரெண்டிங் ஆனது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாரதத்தின் அதிருஷ்டம் பூபேன் ஹசாரிகா: பிரதமா் நரேந்திர மோடி

ஹிமாசல்: பசுவின் வயிற்றில் இருந்து 28 கிலோ பிளாஸ்டிக், 41 ஆணிகள் அகற்றம்

டி20 தொடரை வென்றது இலங்கை!

அமெரிக்க வரியால் 2-ஆம் காலாண்டில் தாக்கம்: சிஇஏ நாகேஸ்வரன்

வாக்குத் திருடா்களை பாதுகாக்கிறது தோ்தல் ஆணையம்: காா்கே குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT