இந்தியா

தில்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோரா அமித் ஷா உடன் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தில்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோரா மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்தித்தார். 

DIN

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தில்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோரா மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்தித்தார். 

தில்லி காவல்துறை ஆணையராக நியமிக்கப்படுவதற்கு முன்பு துணை ராணுவப் படையான இந்திய-திபெத்திய எல்லைக் காவல்துறை தலைவராக இருந்தார். 

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு காவல்துறையின் சிறப்புப் பணிக்குழுவின் ஒரு பகுதியாக இருந்த அரோரா, ஞாயிறன்று ஓய்வு பெற்ற குஜராத் ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானவுக்குப் பிறகு பொறுப்பேற்றார். 

57 வயதான அரோரா தில்லி காவல் சட்டம் இயற்றப்பட்டு கமிஷனரேட் நிறுவப்பட்டதில் இருந்து மூன்றாவது அதிகாரி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லோக நாயகி... கல்யாணி பிரியதர்ஷன்!

சினிமா வாரிசுகள் புதியவர்களின் வாய்ப்புகளைக் கெடுக்கிறார்களா? துல்கர் சல்மான், ராணா பதில்!

திருப்பதியில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்

ஹிப்ஹாப் ஆதி இசை - ரஜினி நடனம்: வைரலாகும் ரீல்ஸ்கள்!

கார்மேகக் குழலி... சைத்ரா ஆச்சார்!

SCROLL FOR NEXT