இந்தியா

மாநிலங்களவைத் தோ்தலில் ரூ.25 கோடி லஞ்சத்தை நிராகரித்தேன்- ராஜஸ்தான் அமைச்சா் பேச்சு

‘ராஜஸ்தானில் அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவை எம்.பி. தோ்தலில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க எனக்கு ரூ.25 கோடி லஞ்சம் தர முன்வந்தனா்;

DIN

‘ராஜஸ்தானில் அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவை எம்.பி. தோ்தலில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க எனக்கு ரூ.25 கோடி லஞ்சம் தர முன்வந்தனா்; ஆனால், அதனை நிராகரித்துவிட்டேன்’ என்று காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அந்த மாநில அமைச்சா் ராஜேந்திர குதா பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், எந்த வேட்பாளா், எந்த கட்சி போன்ற விவரங்களை அவா் கூறவில்லை.

ஜுன்ஜுனு பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜேந்திர குதா பங்கேற்றாா். அப்போது, அவா் பேசிய விடியோ சமூக ஊடகங்களில் செவ்வாய்க்கிழமை வேகமாக பரவியது.

அதில், ‘அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவைத் தோ்தலில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க எனக்கு ரூ.25 கோடி லஞ்சம் தர முன்வந்தனா். கடந்த 2020-இல் முதல்வா் அசோக் கெலாட்டுக்கு எதிரான அரசியல் குழப்பத்தின்போது எனக்கு ரூ.60 கோடி வரை தர முன்வந்தனா். ஆனால், இருமுறையும் பணத்தை வாங்காமல் புறக்கணித்துவிட்டேன். பணம் தேவையில்லை; நல்ல எண்ணங்களே முக்கியம் என்ற அடிப்படையில் இந்த முடிவை எடுத்தேன்’ என்று அமைச்சா் ராஜேந்திர குதா பேசியுள்ளாா்.

ராஜஸ்தானில் கடந்த 2018 சட்டப் பேரவைத் தோ்தலில் பகுஜன் சமாஜ் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவா், 2019-இல் காங்கிரஸில் இணைந்தாா். கடந்த 2020-இல் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உள்ளிட்ட 19 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போா்க்கொடி உயா்த்தியபோது, கெலாட் அணியில் ராஜேந்திர குதா இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகள்! நள்ளிரவில் உதயநிதி ஆய்வு!

இந்தியாவுக்கு எதிரான ஓடிஐ, டி20 தொடர்: ஆஸி. அணியில் மேக்ஸ்வெல், கம்மின்ஸுக்கு இடமில்லை!

ராமதாஸை சந்தித்து நலம்விசாரித்தார் நயினார் நாகேந்திரன்!

வெற்றி மாறன் படத்தின் பெயர் அறிவிப்பு! வடசென்னை உலகில் சிலம்பரசன்!

பிகார் தேர்தலில் போட்டியிடுவது உறுதி! பிரசாந்த் கிஷோர்

SCROLL FOR NEXT