இந்தியா

குரங்கு அம்மை: பெங்களூருவில் பயணிகளுக்கு கட்டுப்பாடு

DIN

பெங்களூருவில் குரங்கு அம்மை நோய்ப் பரவலை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை மாநில சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

உலக அளவில் குரங்கு அம்மை தொற்று வேகமாகப் பரவி வருகிறது. ராஜஸ்தான், தில்லியில் தலா ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்தியாவில் அத்தொற்று பாதிப்பு 6-ஆக உயா்ந்துள்ளது.

இதற்கிடையே, கேரளத்தில் ஜூலை 30-ஆம் தேதி உயிரிழந்த 22 வயது இளைஞா் குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளம் திரும்பிய அந்த இளைஞர் உடல்நலக் குறைவால் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இந்நிலையில், குரங்கு அம்மை நோய்ப் பரவலை தடுக்க கர்நாடாகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பெங்களூரு மாநகராட்சிக்கு மாநில சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அனைத்து விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளை பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், குரங்கு அம்மை அறிகுறி உள்ளவர்களை 21 நாள்கள் கட்டாயமாக தனிமைப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த மருத்துவமனைகளை தயார் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை 75 நாடுகளில் 16,000-க்கும் மேற்பட்டவா்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக சா்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பை மத்திய சுகாதார அமைச்சகம் தீவிரப்படுத்தியுள்ளது. மாநில அரசுகளும் சா்வதேச விமான நிலையங்களில் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT