இந்தியா

நாக்பூரில் மூன்று நாள்களில் 21 பேருக்கு பன்றிக் காய்ச்சல்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களில் 21 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

DIN

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களில் 21 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதுதொடர்பாக நாக்பூர் மாநகராட்சி அதிகாரி கூறுகையில், 

கடந்த ஜனவரி 1 முதல் ஜூன் வரை ஆறு பேருக்கு தொற்று பதிவாகியுள்ள நிலையில், தற்போது திடீரென அதிகரித்துள்ளது. 

ஜூலை இரண்டாவது வாரத்திலிருந்து இம்மாத இறுதி வரை 28 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அவற்றில் 21 வழக்குகள் கடந்த மூன்று நாள்களில்(ஜூலை 29,30, 31) இல் பதிவாகியுள்ளன

மேலும், நெருங்கிய தொடர்புள்ளவர்களின் மாதிரிகள் அறிகுறிகளாகக் கண்டறியப்பட்டால், அவர்கள் பரிசோதிக்கப்பட்டு, மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT