இந்தியா

பாஜகவை பலப்படுத்த வேண்டும்: பாஜகவில் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்

ஹரியாணா காங்கிரஸ் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான குல்தீப் பிஷ்னோய் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார். அவர் நாளை பாஜகவில் சேரவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

DIN


ஹரியாணா காங்கிரஸ் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான குல்தீப் பிஷ்னோய் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார். அவர் நாளை பாஜகவில் சேரவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

குல்தீப் பிஷ்னோய் தனது ராஜிநாமா கடிதத்தை ஹரியாணா சட்டப்பேரவைத் தலைவர் ஜியான் சந்த் குப்தாவிடம் ஒப்படைத்தார். 

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான குல்தீப் பிஷ்னோய் ஹிசார் மாவட்டத்தின் ஆதம்பூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். அவர் 4 முறை எம்.எல்.ஏ.வாகவும், 2 முறை எம்.பி.யாகவும் தேர்வு செய்யப்பட்டவர். 

தற்போது காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள பிஷ்னோய், ராஜிநாமா செய்ததால், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கே அவர் வாக்களித்ததாகவும் தெரிகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி அதிருப்தி அடைந்தது. 

மேலும், ஹரியாணா மாநில தலைவர் பொறுப்பை பிஷ்னோய்க்கு வழங்கவும் சமீபத்தில் காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், குல்தீப் பிஷ்னோய் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது ராஜிநாமா கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவரிடம் ஒப்படைத்த நிலையில், நாளை பாஜகவில் சேரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

ஹரியாணா முதல்வரான, மனோகர் லால் கட்டாரின் செயல்களை பலப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

SCROLL FOR NEXT