நாடாளுமன்றம் 
இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் நாளை(ஆக.5) வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியால் நாளை(வெள்ளிக்கிழமை) வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

DIN

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியால் நாளை(வெள்ளிக்கிழமை) வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இன்றைய அலுவல்கள் காலை 11 மணிக்கு மாநிலங்களவையில் தொடங்கிய நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் யங் இந்தியா நிறுவனத்திற்கு சீல் வைத்தது குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை வைத்தார்.

அவரின் கோரிக்கையை ஏற்க அவைத் தலைவர் மறுத்ததால், எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவை நடவடிக்கைகளை பகல் 12 மணிவரை ஒத்திவைப்பதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

அதேபோல், மக்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டதால், அவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் அவை கூடியதும் எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் இரு அவைகளும் நாளை(வெள்ளிக்கிழமை) வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி டிரைலர் தேதி!

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

SCROLL FOR NEXT