இந்தியா

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித்?

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

DIN

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் பதவிக்காலம் வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, அவர் புதிய தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்க வேண்டும். 

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு மத்திய சட்டத்துறை அமைச்சர், தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார். 

அதன்படி, மூத்த நீதிபதி என்பதன் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பெயரை பரிந்துரை செய்துள்ளார் என்.வி. ரமணா. 

இதனால், உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக  உதய் உமேஷ் லலித் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

இவர் யாரோ...?

அஜித்தைச் சந்தித்த பிரபல இயக்குநர்கள்! ஏன்?

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

SCROLL FOR NEXT