துவக்கப் பள்ளி ஆசிரியருக்கு 79 ஆண்டுகள் கடுங்காவல் சிறை 
இந்தியா

துவக்கப் பள்ளி ஆசிரியருக்கு 79 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

துவக்கப் பள்ளியில் 4 மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த கணிதப் பாட ஆசிரியருக்கு 79 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

DIN


கோழிக்கோடு: கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில் 4 மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த கணிதப் பாட ஆசிரியருக்கு 79 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பையனூரைச் சேர்ந்த 50 வயதாகும் குற்றவாளி பி.இ. கோவிந்தன் நம்பூதரிக்கு ரூ.2.7 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

12 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது, கல்வி மையங்களில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது, தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது என்பது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இவர் மீது தொடரப்பட்ட நான்கு வழக்குகளிலும், தலா 3 சட்டப்பிரிவுகளின் கீழ் பதியப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, ஒவ்வொரு சட்டப்பிரிவுக்கும் தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT