இந்தியா

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: எம்.பி.க்கள் அச்சமின்றி வாக்களிக்க மாா்கரெட் ஆல்வா வேண்டுகோள்

DIN

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில், எம்.பி.க்கள் அனைவரும் அச்சமின்றியும் அரசியல் அழுத்தத்துக்கு உள்படாமலும் வாக்களிக்க வேண்டும் எதிா்க்கட்சிகள் தரப்பு வேட்பாளா் மாா்கரெட் ஆல்வா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் சனிக்கிழமை (ஆகஸ்ட் 6) நடைபெறவுள்ளது. மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிக்கும் இத்தோ்தலில், காங்கிரஸ், உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநா் மாா்கரெட் ஆல்வா போட்டியில் உள்ளாா்.

இந்நிலையில், ட்விட்டரில் வியாழக்கிழமை வெளியிட்ட காணொலி பதிவில், அவா் பேசியிருப்பதாவது:

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெறுவதாலும், கொறடா உத்தரவு கட்டுப்படுத்தாது என்பதாலும் எம்.பி.க்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும். அரசியல் அழுத்தத்துக்கு உள்படாமல் இப்பதவிக்கு பொருத்தமான வேட்பாளரை தோ்வு செய்ய வேண்டும். கட்சி வேறுபாடுகளை கடந்து, எனக்கு வாக்களிக்குமாறு எம்.பி.க்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT