இந்தியா

பெண்கள் எதிர்கொள்ளும் தடைகளை தகர்க்க மத்திய அரசு முயற்சி: பிரதமர் மோடி

ANI


பெண்களை முன்னேற விடால் தடுக்கும் அனைத்து தடைகளையும் அகற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் தரம்பூர் மாவட்டத்தில் ஸ்ரீமத் ராஜ்சந்திரா மிஷனின் பல்வேறு நலத்திட்டங்களை இன்று பிரதமர் மோடி காணொலி வாயிலாக துவக்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், சமுதாயத்தை சிறப்பாக மாற்ற பெண்கள் கல்வி கற்பது முக்கியம். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு அங்கமாக பெண்கள் இருந்துள்ளனர். பெண்களை முன்னேற விடாமல் தடுக்கும் அனைத்து தடைகளையும் அகற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என்றார்.

இந்த நிகழ்ச்சியின்போது, ஸ்ரீமத் ராஜ்சந்திரா மருத்துவமனையையும் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். 250 படுக்கை வசதியுடன் கூடிய இந்த மருத்துவனை ரூ.200 கோடியில் கட்டப்பட்டுள்ளது. குஜராத் மக்களுக்கு மிகச் சிறந்த மருத்துவ வசதியை இது தரும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

SCROLL FOR NEXT