முகப்பு
இந்தியா

விசாரணை அமைப்புகளுக்கு காங்கிரஸ் அழுத்தம் கொடுப்பது நியாயமில்லை: அனுராக் தாக்குர் 

போராட்டங்கள் மூலம் விசாரணை அமைப்புகளுக்கு காங்கிரஸ் அழுத்தம் கொடுப்பது நியாயமில்லை என்று மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

போராட்டங்கள் மூலம் விசாரணை அமைப்புகளுக்கு காங்கிரஸ் அழுத்தம் கொடுப்பது நியாயமில்லை என்று மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்துள்ளார். 

விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு எதிராக இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்தது. அதன்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. 

குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சசி தரூர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை தில்லி காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.  இந்த நிலையில் விசாரணை அமைப்புகளுக்கு காங்கிரஸ் அஞ்சுவதாக மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும்  கூறியதாவது, போராட்டங்கள் மூலம் விசாரணை அமைப்புகளுக்கு காங்கிரஸ் அழுத்தம் கொடுகிறது. இது நியாயமில்லை. சோனியா, ராகுல் காந்தி தயது செய்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.  நாடு உண்மையை அறிய விரும்புகிறது. விசாரணை அமைப்புகள் அதன் வேலையைச் செய்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →