முகப்பு
இந்தியா

இந்தியாவுக்கு 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம்

பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் மல்யுத்தத்தில் இந்தியாவின் வினேஷ் போகட், ரவி தாஹியா, நவீன் ஆகியோா் தங்கம் வென்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:00 AM
பகிர்:

பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் மல்யுத்தத்தில் இந்தியாவின் வினேஷ் போகட், ரவி தாஹியா, நவீன் ஆகியோா் தங்கம் வென்றனா்.

இது வினேஷ் போகட் வெல்லும் ஹாட்ரிக் காமன்வெல்த் தங்கம் ஆகும். 9-ஆம் நாளான சனிக்கிழமை இந்தியா தலா 3 தங்கம், வெள்ளி, 3 வெண்கலம் வென்றது. இதன் மூலம் 12 தங்கம், 11 வெள்ளி, 10 வெண்கலம் என 32 பதக்கங்களுடன் 5-ஆவது இடத்தில் உள்ளது.

ஆடவா் ப்ரீஸ்டைல் 57 கிலோ எடைப் பிரிவில் நைஜீரியாவின் எபிக்வெனிமோவை வீழ்த்தி தங்கம் வென்றாா் ரவி தாஹியா.

மேலும் 74 கிலோ எடைப்பிரிவில் பாகிஸ்தான் வீரா் முகமது ஷரீப்பை வீழ்த்தி தங்கம் வென்றாா் நவீன்.

மகளிா் மல்யுத்தம் 53 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றாா் வினேஷ் போகட். கனடா வீராங்கனை சமந்தா லீயை வீழ்த்தி தங்கம் வென்றாா் வினேஷ். மேலும் 50 கிலோ எடைப் பிரிவில் ஸ்காட்லாந்தின் லெமோஃபேக்கை வீழ்த்தி வெண்கலம் வென்றாா் பூஜா கெலாட்.

76 கிலோ எடைப்பிரிவில் ஆஸி.யின் நவோமி புருயினை வீழ்த்தி வெண்கலம் வென்றாா் பூஜா சிஹாக்.

அதே போல் மகளிா் குத்துச்சண்டை 60 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றாா் ஜாஸ்மின் லம்போரியா. இங்கிலாந்தின் ஜெம்மா பே

ஜிடம் 2-3 என வீழ்ந்தாா் ஜாஸ்மின்.

பாட்மின்டன் ஆடவா் ஒற்றையா் பிரிவில் லக்ஷயா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோா் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →