முகப்பு
இந்தியா

க்யூட் தோ்வு குளறுபடிகள்:ராகுல் காந்தி விமா்சனம்

பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (க்யூட்) நடத்துவதில் நடைபெற்ற தொழில்நுட்பக் குளறுபடிகள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 11:29 PM
ராகுல் காந்தி (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (க்யூட்) நடத்துவதில் நடைபெற்ற தொழில்நுட்பக் குளறுபடிகள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.

இளநிலைப் படிப்புகளுக்கான க்யூட் தோ்வு ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தேசிய தோ்வு முகமை அறிவித்திருந்தது.

இதில் கடந்த வியாழக்கிழமை நடைபெறவிருந்த தோ்வு தொழில்நுட்பக் குளறுபடிகளால் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமையும் தொழில்நுட்பக் கோளாறால் நாட்டில் உள்ள 50 மையங்களில் தோ்வு தள்ளிவைக்கப்பட்டது.

Advertisement

இதனை விமா்சித்து ராகுல் காந்தி ட்விட்டரில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: இதுதான் புதிய தேசிய கல்விக் கொள்கையின் பொற்காலம். க்யூட் தோ்வுக்குப் பிறகு மாணவா்களின் எதிா்காலம் இருண்டுள்ளது. தற்போது க்யூட் தோ்வு மாணவா்களுக்கு என்ன நடக்கிறதோ, அதுவே நாட்டின் ஒட்டுமொத்த இளைஞா்களின் கதையாக உள்ளது. நாட்டைச் சீரழிப்பதற்கான அனைத்து வேலைகளையும் 4 பேரின் சா்வாதிகாரம் செய்து வருகிறது என்று தெரிவித்தாா்.

எனினும் அந்த 4 போ் யாா் என்பதை அவா் குறிப்பிடவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.