இந்தியா

ம.பி.யில் போலீஸ் உளவாளி என்ற சந்தேகத்தில் ஒருவர் சுட்டுக் கொலை

IANS

மத்தியப் பிரதேசம் பாலகாட் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் போலீஸ் உளவாளி என்ற சந்தேகத்தின் பேரில் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

இறந்தவர் மலாஜ்கண்ட் கிராமத்தைச் சேர்ந்த லாலு துர்வே என அடையாளம் காணப்பட்டுள்ளார். மாவோயிஸ்ட்டுகள் சடலத்தை எடுத்துச் சென்றனர். கிராம மக்களின் உதவியுடன் உடலை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். 

இதுகுறித்து பாலகாட் காவல் கண்காணிப்பாளர் சமீர் சௌரவ் கூறுகையில், வனப்பகுதியில் லாலு துர்வே என்பவர் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர்கள் உடலை எடுத்துச் சென்றனர். தகவலறிந்ததும் போலீசார் குழு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. 

சம்பவ இடத்தில் கையால் எழுதப்பட்ட துண்டுச்சீட்டு ஒன்று கண்டறியப்பட்டது. அதில் துர்வேவைக் கொல்லும் பொறுப்பை கம்யூனிஸ்ட் கட்சி(மாவோயிஸ்ட்) ஏற்றுக்கொள்கிறது என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் உள்ளூர் மக்களைப் பணத்திற்கு ஏமாற்றி தகவல் தருவதை நிறுத்துமாறு காவல்துறையை எச்சரித்துள்ளது. 

கிராம மக்களையும் மாவோயிஸ்ட்டுகள் எச்சரித்துள்ளனர். யாரேனும் போலீஸ் உளவாளியாக இருந்தால் அவருக்கும் அதே கதியைச் சந்திக்க நேரிடும்.

இருப்பினும், பழங்குடியினர் ஆதிக்கம் மற்றும் நக்சலைட் மண்டலமான பாலகாட் வனப்பகுதியில் இதுபோன்ற சம்பவம் இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஐடி வேந்​தர் கோ.வி​சு​வ​நா​த​னுக்கு மேலும் ஒரு கௌ​ரவ டாக்​டர் பட்டம்

நாட்டின் வளர்ச்சியில் பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு

பாலம் கட்டுமானப் பணிகள்: ஆணையர் ஆய்வு

'இந்தியா' கூட்டணி 315 இடங்களில் வெற்றி பெறும்: மம்தா பானர்ஜி

லக்னௌவை வென்றது டெல்லி: "பிளே-ஆஃப்' சுற்றில் ராஜஸ்தான்

SCROLL FOR NEXT