இந்தியா

இமாச்சலில் 300 யூனிட் மின்சாரம் இலவசம்: காங்கிரஸ் வாக்குறுதி

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் 300 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் ஏழைப் பெண்களுக்கு ரூ.1,500 நிதியுதவி வழங்கப்படும் என காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. 

DIN

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் 300 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் ஏழைப் பெண்களுக்கு ரூ.1,500 நிதியுதவி வழங்கப்படும் என காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. 

சத்தீஸ்கர் முதல்வரும், இமாச்சலப் பிரதேசத்திற்கான காங்கிரஸின் தலைமைத் தேர்தல் பார்வையாளருமான பூபேஷ் பாகேல் ஆட்சிக்கு வந்த 10 நாள்களுக்குள், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் செய்தது போல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக உறுதியளித்தார். 

காங்கிரஸ் மூத்த தலைவர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

நிதி கிடைப்பது குறித்த கேள்விக்கு, தனது கட்சி ஆட்சிக்கு வந்தால், வாக்குறுதிகளை நிறைவேற்ற மாநில பட்ஜெட்டில் தகுந்த ஒதுக்கீடுகள் செய்யப்படும் என்று பாகேல் கூறினார்.

இந்த வாக்குறுதிகள் விரைவில் வெளியிடப்படும், கட்சியின் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்படும் என்றும் அவர் கூறினார். 

இமாச்சல பிரதேசத்துக்கு டிசம்பரில் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துறையூா் பகுதியில் நாளை(ஆக.4) மின் தடை

மணப்பாக்கம் சின்ன கன்னியம்மன் கோயில் ஆடி தீமிதி விழா

முசிறி அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

ஆக. 7-இல் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் முப்பெரும் விழா

முசிறியில் காரில் வெளி மாநில மதுபாட்டில் கொண்டு சென்றவா் கைது

SCROLL FOR NEXT