கோழிக்கோடு விமான விபத்து (கோப்பிலிருந்து) 
இந்தியா

கோழிக்கோடு விமான விபத்து நினைவுநாள்: உயிருடன் தப்பியவர்கள் செய்யும் கைமாறு

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்தில் உயிர் பிழைத்தவர்கள், சம்பவ இடத்தில் கூடி அன்றைய நாளில் நடந்த நிகழ்வுகளை தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர்.

DIN


கோழிக்கோடு: கேரள மாநிலம் கரிப்பூர் சர்வதேச விமான நிலையம் அருகே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்தில் உயிர் பிழைத்தவர்கள், சம்பவ இடத்தில் கூடி அன்றைய நாளில் நடந்த நிகழ்வுகளை தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர்.

2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி துபையிலிருந்து வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளாகி இரண்டு துண்டுகளாக உடைந்தது. 

அன்று நிகழ்ந்த கோர விபத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்தது. இரண்டு எரிவாயு டேங்குகளும் சேதமடைந்து எரிபொருள் கசிந்து கொண்டிருந்தது. எந்த நேரத்திலும் என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை..

ஆனால், விபத்து நிகழ்ந்ததைப் பார்த்ததும், அப்பகுதி மக்கள் ஓடோடி வந்து, விமானத்துக்குள் சிக்கியிருந்தவர்களை மிகவும் சிரமப்பட்டு மீட்டனர். அவர்களுக்கு வெறும் நன்றி என்று சொல்லிவிட முடியுமா என்ன? வாழ்வை மாற்றிய விமான விபத்தில் இன்று உயிர் பிழைத்திருக்கிறோம் என்றால் அதற்கு அங்கிருந்த சில நல்லுள்ளங்கள்தான் காரணம் என்கிறார்கள் விபத்திலிருந்து மீண்டவர்கள்.

அவர்களுக்கு கைமாறு செய்யும் வகையில், அப்பகுதியில் மக்களின் அடிப்படைத் தேவையான மருத்துவமனை ஒன்றைக் கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், விமான விபத்தில் உயிர் பிழைத்தவர்களும் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் என  ஏராளமானோர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் தங்களுக்குக் கிடைத்த இழப்பீடு மற்றும் நிவாரணத் தொகையிலிருந்து பணத்தைத் திரட்டி சுமார் 50 லட்சத்தைச் சேர்த்துள்ளனர். அந்தத் தொகையைக் கொண்டு சிராயில் என்ற பகுதியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தைக் கட்டுவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விபத்து நேரிட்டதும் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தான் முதன் முதலில் ஓடி வந்து உதவியவர்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT