பிகார் ஜே.டி,.யூ., ஆர்.ஜே.டி., காங்கிரஸ் உள்பட 7 கட்சிகளின் கூட்டணி நாளை மாலை 4 மணிக்கு பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிகார் மாநிலத்தில் கடந்த சில நாள்களாகவே அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வந்த நிலையில், கருத்து மோதல் காரணமாக பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதீஷ் குமார், பாஜக கூட்டணியில் இருந்து விலக முடிவெடுத்தார்.
இருவரும் பிகாரில் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில் கூட்டணி கட்சியின் தலைவராக நிதீஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார்.
ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி பேச்சுவார்த்தைக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் இருவரும் ஆளுநரை சந்தித்தனர். கூட்டணி அமைத்ததன் மூலம் 160 எம்.எல்.ஏ.க்கள் நிதீஷ் குமார் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாநிலத்தின் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவை அவரது இல்லத்தில் சென்று நிதீஷ் குமார் சந்தித்தார்.
பிகார் ஜே.டி,.யூ., ஆர்.ஜே.டி., காங்கிரஸ் உள்பட 7 கட்சிகளின் கூட்டணி நாளை மாலை 4 மணிக்கு பதவியேற்கும். மேலும் நிதீஷ் குமார் முதலமைச்சராகவும், தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராகவும் பதவியேற்க உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.