பொத்தானை அழுத்தினால் பணம்..! கவனம் ஈர்க்கும் கான் சிட்டி படத் தலைப்பு டீசர்!
அர்ஜுன் தாஸ், நடிகை அன்னா பென் நடிக்கும் கான் சிட்டி படத்தின் தலைப்பு டீசர் குறித்து...
நடிகர் அர்ஜுன் தாஸ், நடிகை அன்னா பென் நடிக்கும் புதிய படமான ’கான் சிட்டி’ படத்தின் தலைப்பு டீசர் வெளியாகியுள்ளது.
புதுமையான கதைக்களத்தில், கொண்டாட்டமான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகிவரும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
முதல்பார்வை போஸ்டர் மூலம் ஏற்கெனவே ஆர்வத்தை தூண்டியிருந்த இந்த படம், தற்போது வெளியான டைட்டில் டீசர் மூலம் மேலும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
Advertisement
Advertisement
நகர வாழ்க்கையில் கடனில் போராடும் ஒரு நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையோடு ஆரம்பிக்கும் தலைப்பு டீசர், அடுத்தடுத்து ஆச்சரியம் தரும் காட்சிகளால் அதிர வைக்கிறது.
அவர்களுக்கு கிடைக்கும் ஒரு பண மிஷின், பொத்தானை அழுத்தினால் பணம் கொட்டும் என கண்கள் விரிய ஒரு புதுமையான கதைக்களத்திற்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.
உணர்வுப்பூர்வமாக ஆரம்பிக்கும் இந்த டீசர் நகைச்சுவைக்கு மாறி வெகு சுவாரஸ்யமாக நிறைவு பெறுகிறது.
இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு, மூத்த நடிகை வடிவுக்கரசி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ளார். படப்பிடிப்பு மங்களூர், சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் நடைபெற்றதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனித்துவமான இசையால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பது ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Arjun Das and Anna Ben Con City – Title Tamil Teaser.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.