அதீத வன்முறை... பான் இந்திய மொழிகளில் வெளியான ரஷ்மிகா மந்தனாவின் மைசா பட டீசர்!
நடிகை ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள மைசா படத்தின் டீசர் குறித்து...
நடிகை ரஷ்மிகா மந்தனா (30 வயது) நடிப்பில் உருவாகியுள்ள மைசா திரைப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
பான் இந்தியளவில் பிரபலமாக இருக்கும் நடிகை ரஷ்மிகா தற்போது மைசா என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை ரவிந்திர புள்ளே இயக்க, ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.
ஆக்சன் காட்சிகளால் உருவாகும் இப்படத்தின் கிளிம்ஸ் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது. இந்த நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் அதீத வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் ஈஸ்வரி ராவ், ராகுல் ரவீந்திரன், சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், சிவ கந்துகுரி, கார்த்திக் ரஞ்சினி, தாரக் பொன்னப்பா, நிதி சிங் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய பான் இந்திய மொழிகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் திரையரங்குகளில் வருகிற நவ. 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதன் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
Rashmika Mandanna exudes fierceness and unleashes extreme violence in Mysaa teaser
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.