FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீடு!

துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது குறித்து...

வாழை ஜானகியுடன் நடிகர் தக்க்ஷன் விஜய் - எக்ஸ்
பகிர்:

கோவை தனியார் கல்லூரியில் துரோகம் பழகு திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் 4000 மாணவ-மாணவிகள் உற்சாக பங்கேற்றனர்.

மகிழ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் பியூலா மகிழ் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் துரோகம் பழகு. தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் விளம்பரப் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

​முன்னதாக இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாவது பார்வையை புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement

Advertisement

​இதன் தொடர்ச்சியாக, கோவையில் உள்ள பிரபல ரத்தினம் கல்லூரியில் இப்படத்தின் பிரமாண்ட ப்ரொமோஷன் விழா நடைபெற்றது. சுமார் 4000-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அதன் மத்தியில் மூன்றாவது போஸ்டரை வெளியிட்டனர்.

​இந்நிகழ்ச்சியில் படக்குழுவைச் சேர்ந்த நடிகர் தக்க்ஷன் விஜய் மற்றும் வாழை ஜானகி அம்மா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடினர்.

நடிகர் தக்க்ஷன் விஜய்

​விழாவின் மிக முக்கிய சிறப்பம்சமாக திரையிடப்பட்ட இப்படத்தின் டீசர், மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

மாணவ, மாணவிகளின் உற்சாகத்திற்கு மதிப்பளித்து, டீசர் மீண்டும் திரையிடப்பட்டு கொண்டாடபட்டது.

​மாணவர்களின் இந்த பேராதரவும், கல்லூரியின் எழுச்சியான வரவேற்பும் 'துரோகம் பழகு' படத்தின் வெற்றிக்கு வலுவான அடித்தளமாக அமைந்திருக்கிறது. இப்படம் மிக விரைவில் திரைக்கு வரவிருப்பதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

summary

Teaser of the film 'Drogam Pazhagu' released among students!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments