நடுக்கடலில் வெளியிடப்பட்ட துரோகம் பழகு பட போஸ்டர்!
துரோகம் பழகு படத்தின் போஸ்டர் வித்தியாசமான முறையில் நடுக்கடலில் வெளியிடப்பட்டது குறித்து...
துரோகம் பழகு படத்தின் போஸ்டர் வித்தியாசமான முறையில் நடுக்கடலில் வெளியிடப்பட்டது.
மகிழ் புரொடஷன்ஸ் சார்பில் சி. பியூலா மகிழ் தயாரிப்பில் உருவாகியுள்ள துரோகம் பழகு திரைப்படத்தின் போஸ்டர், கவனம் ஈர்க்கும் வகையில் புதுச்சேரி கடலில் வித்தியாசமான முறையில் வெளியிடப்பட்டது.
தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரெய்லர் மற்றும் போஸ்டர் வெளியீடுகள் தொடர்ந்து புதுமையான முறையில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ‘துரோகம் பழகு’ படக்குழுவினர் தங்களது படத்தின் போஸ்டரை புதுச்சேரி நடுக்கடலில் வெளியிட்டு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
Advertisement
Advertisement
படக்குழுவினரின் ஏற்பாட்டில் நடுக்கடலுக்குச் சென்ற மீனவர்கள், துரோகம் பழகு திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டனர். கடலின் நடுவே மீனவர்களின் கைகளில் படத்தின் போஸ்டர் வெளியான இந்த நிகழ்வு, வித்தியாசமான முயற்சியாக அமைந்துள்ளது.
இப்படத்தில் தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜி.எம். குமார், வனிதா விஜயகுமார், லொள்ளு சபா ஜீவா, அமுதவாணன், அப்புகுட்டி, திவாகர், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை சீயோன் ராஜா இயக்கியுள்ளார். ராஜா மற்றும் பாலா இசையமைத்துள்ளனர்.
‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
Poster of the film 'Drogam Pazhagu' released in the middle of the sea!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.