ஹனுமான் 2: ரைஸ் ஆஃப் வானராஸ் படத்தின் அறிவிப்பு போஸ்டர்!
நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிப்பில் உருவாகும் ஹனுமான் 2 படத்தின் போஸ்டர் குறித்து...

’ஹனுமான்' திரைப்படத்தை உருவாக்கியவர்களின் பிரம்மாண்டமான கற்பனைப் படைப்பில், ஹனுமான் யுனிவர்ஸின் (HanuMan Universe) புதிய அத்தியாயமாக அதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் ஹனுமான் படம் கடந்த 2024ல் வெளியாகி ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது.
தற்போது, இதன் இரண்டாம் பாகத்தில் திறமையான இளம் நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் முன்னதாக உப்பெனா படத்தில் நடித்து கவனம் பெற்றவர்.
Advertisement
Advertisement
இந்தப் படத்துக்கு 'ஹனுமான் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்' (HanuMan 2: The Rise of Vanaras) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பிரம்மாண்டமான படத்திற்கு புதிய படைப்பாற்றல் மிக்க பார்வையைக் கொண்டு வர இயக்குநர் விஐ. ஆனந்த் இயக்குகிறார்.
கற்பனை மற்றும் புனைவு நிறைந்த கதை சொல்லலில் அவரது தனித்துவமான அணுகுமுறை, படத்திற்கு ஒரு வசீகரிக்கும் பரிமாணத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்திய மொழிகளில் வெளியாக இருக்கிறது. டைட்டில் போஸ்டரில், பிரம்மாண்டமான வானுலக வால் மற்றும் தெய்வீகப் பிரசன்னத்தால் சூழப்பட்டு, மேகங்களுக்கு மேலே எழும் ஒரு மனிதனின் சக்திவாய்ந்த காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்தத் திரைப்படத்தைப் பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் தயாரிக்கிறார்கள். இவர்கள் இத்துடன் சாய் துர்கா தேஜ் நடிக்கும் 'எஸ்ஒய்ஜி.' (SYG) படத்தையும், கிச்சா சுதீப் நடிக்கும் 'பிஆர்பி.' (BRB) படத்தையும் தயாரித்து வருகிறார்கள்.