பிகாரில் என்ன நடக்கிறது? ராஷ்ட்ரிய ஜனதா தள எம்எல்ஏக்களிடமிருந்து வாங்கப்பட்ட செல்லிடப்பேசிகள் 
இந்தியா

பிகாரில் என்ன நடக்கிறது? ராஷ்ட்ரிய ஜனதா தள எம்எல்ஏக்களிடமிருந்து வாங்கப்பட்ட செல்லிடப்பேசிகள்

ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதிஷ் குமார் இன்று தனது கட்சித் தலைவர்களுடனான சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ANI

பிகாரில் அரசியல் மாற்றம் நிகழ்வதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதிஷ் குமார் இன்று தனது கட்சித் தலைவர்களுடனான சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பாஜகவுடனான கூட்டணியில் முறிவு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், பிகாரில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு முடிவு எட்டப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் இன்று தங்களது எம்எல்ஏக்களின் கூட்டத்தைக் கூட்டுகின்றன. பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள நிதிஷ் குமார் முடிவு செய்துவிட்டால், அவர்கள் இவருடன் கைகோர்க்கலாம் என்று தெரிகிறது.

இன்று காலை பாட்னாவில் உள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வீட்டில் எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கு வரும் தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் செல்லிடப்பேசிகள் வெளியியிலேயே பாதுகாப்பு அதிகாரிகளால் வாங்கி வைத்துக் கொள்ளப்படுகிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம், நிதிஷ் குமார், காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் மகாகத்பந்தன் என்ற பெயரில் கூட்டணியிலிருந்து வெளியேறி பாஜகவுடன் கைகோர்த்து முதல்வராக நீடித்தார்.

இந்த நிலையில், 2020ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. நிதிஷ் குமார் முதல்வரானார். தற்போது இந்தக் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதையடுத்து, பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு தனது பழைய நண்பர்களிடம் கைகுலுக்கத் திட்டமிட்டுள்ளார் நிதிஷ் குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனிதநேயம், நீதி படுகொலை: தலித் இளைஞர் கொலைக்கு ராகுல் கண்டனம்!

உடல் பருமன் இருந்தால் மறதி ஏற்படுமா? - ஆய்வில் முக்கிய தகவல்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு! பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு!

முதல்வர் ஸ்டாலின் வருகை! கோவையில் போக்குவரத்து மாற்றம்!!

கடந்த இரு வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

SCROLL FOR NEXT