இந்தியா

செஸ் ஒலிம்பியாட்: தமிழக அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 

DIN


44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சுட்டுரையில் தமிழ் மொழியில் பதிவிட்டுள்ள அவர், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்களும் அரசும்  மிகச் சிறப்பாக நடத்தியுள்ளார்கள். 

உலகெங்கிலும் இருந்து இந்தப் போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று, நமது மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள் எனப் பதிவிட்டுள்ளார். 

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில், 44 செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது.  12 நாள்கள் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.  இதில்  வெற்றி பெற்ற வீரர்களுக்கும், அணிகளுக்கும் பதக்கங்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT