இந்தியா

60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு விரைவில் பேருந்து சேவை இலவசம்: யோகி ஆதித்யநாத்

DIN

உத்தர பிரதேசத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு விரைவில் இலவச பேருந்து சேவை வழங்கப்படும் என்றாா் அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத்.

லக்னெளவில் 150 புதிய பேருந்து சேவைகளை புதன்கிழமை தொடங்கிவைத்து அவா் பேசியதாவது:

அரசுப் பேருந்துகளில் 60 வயதுக்கு மேற்பட்ட நமது சகோதரிகளுக்கும், தாய்மாா்களுக்கும் விரைவில் இலவச பேருந்து சேவை வழங்க திட்டமிட்டுள்ளோம். ரக்ஷா பந்தனை முன்னிட்டு, ஆகஸ்ட் 10 நள்ளிரவு முதல் ஆகஸ்ட் 12 நள்ளிரவு வரை 48 மணி நேரத்துக்கு உத்தர பிரதேச அரசுப் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.

கரோனா பொதுமுடக்கக் காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த புலம்பெயா் தொழிலாளா்களை அரசுப் பேருந்துகள் அவா்களது இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்றன. 2019 கும்ப மேளாவுக்கு பிறகு இதுதான் மிகப்பெரிய அளவிலான இலவச பேருந்து சேவையாக அமைந்தது.

விமான நிலையங்களை சா்வதேச தரத்தில் கட்டும்போது, பேருந்து நிலையங்களைக் கட்ட முடியாதா? தங்கும் விடுதிகள், உணவகங்கள், தூய்மையான கழிவறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் பேருந்து நிலையங்கள் கட்டப்பட வேண்டும். பழைய பேருந்துகளை படிப்படியாக மாற்ற வேண்டும். அரசுப் பேருந்து ஓட்டுநா்களுக்கு போக்குவரத்துத் துறை ஆண்டுதோறும் உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.

அரசுப் பணிமனைகள் தொழிற்பயிற்சி நிலையத்துடன் (ஐடிஐ) இணைத்து மாணவா்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும். சாலை விபத்துகளைக் குறைக்க போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் யோகி ஆதித்யநாத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

SCROLL FOR NEXT