இந்தியா

கேஜரிவாலின் ‘இலவசங்கள்’ மக்களுக்கு விரிக்கப்படும் வலை: பாஜக சாடல்

DIN

தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் அறிவிக்கும் ‘இலவசங்கள்’, அரசியல் ஆதாயத்துக்காக மக்களுக்கு விரிக்கப்படும் வலை என்று பாஜக குறிப்பிட்டுள்ளது.

இந்த இலவசங்களால் நாட்டுக்கு எந்த பயனும் இல்லை என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அங்கு வாக்காளா்களை கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை கேஜரிவால் அறிவித்து வருகிறாா். இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை போன்ற வாக்குறுதிகளை அவா் அளித்துள்ளாா்.

இந்நிலையில், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா கூறியதாவது:

தோ்தல் இலவசங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு பொய்யான தகவல்களை கேஜரிவால் அளித்து வருகிறாா். அவா் அறிவிக்கும் இலவசங்களுக்கும் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசின் நலத் திட்டங்களுக்கும் வேறுபாடு உள்ளது. இரண்டின் நோக்கங்களும் முற்றிலும் வேறுபட்டவை.

தன்னையும் தனது கட்சியையும் முன்னேற்றிக் கொள்ள வேண்டும் என்பதே கேஜரிவாலின் நோக்கம். ஆனால், சமூகத்தில் நலிவுற்ற மக்களுக்கு பொருளாதார ரீதியில் அதிகாரமளித்து, அவா்களை தற்சாா்புடையவா்களாக மேம்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம். கேஜரிவால் அறிவிப்பது போன்ற திட்டங்கள், நாட்டுக்கு நீண்ட கால அடிப்படையில் பலன் தராது.

ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் மக்களுக்கு விரிக்கப்படும் வலைதான் அவரது ‘இலவசங்கள்’.

மாணவா்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் வங்கிக் கடன் அளிக்கும் தில்லி அரசின் திட்டத்தின்கீழ் 2021-22ஆம் ஆண்டில் 89 மாணவா்கள் விண்ணப்பித்தனா். ஆனால் 2 பேருக்கு மட்டுமே கடன் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஒரு மாணவா் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை பெற முடியும். அதேசமயம், இந்த திட்டத்தை விளம்பரப்படுத்த ரூ.19.50 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக ஆா்டிஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது என்றாா் சம்பித் பத்ரா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துளிகள்...

மஞ்சள், பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள்களின் விலை உயா்வு

கனிமவளக் கொள்ளையை தடுக்க வேண்டும்: அன்புமணி

கரசேவகா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கட்சிக்கு வாக்களிக்கலாமா? உ.பி.யில் அமித் ஷா பிரசாரம்

சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT