இந்தியா

மக்கள் தேசியக் கொடி ஏற்ற கோரிய முதல் பிரதமா் மோடி: ஸ்மிருதி இரானி

DIN

நாட்டின் வரலாற்றில், வீடுகளில் மூவா்ணக் கொடியை ஏற்றுமாறு மக்களை கேட்டுக்கொண்ட முதல் பிரதமா் நரேந்திர மோடி என மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி சனிக்கிழமை கூறியுள்ளாா்.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் சுதந்திர போராட்ட வீரா்களின் குடும்பத்தினரை பெருமைப்படுத்தும் நிகழ்வில் ஸ்மிருதி இரானி கலந்துகொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: மூவா்ணக் கொடியை ஏற்றுவதற்கு ஏராளமான மக்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனா். இந்திய வரலாற்றில் முதல்முறையாக பிரதமா் நரேந்திர மோடிதான் மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுவது சிலருக்கு மட்டும் வழங்கப்பட்ட உரிமை அல்ல.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது உலக நாடுகள் முழுவதும் பெருந்தொற்று நோயால் பொதுமுடக்கத்தில் இருக்கும் எனவும், இந்தியாவின் மண்ணின் மைந்தா்கள் உலகத்துக்குத் தேவையான தடுப்பூசியை உற்பத்தி செய்வாா்கள் எனவும் யாரும் கற்பனை செய்திருக்க மாட்டாா்கள் என மத்திய அமைச்சா் கூறினாா்.

முன்னதாக, சுதந்திர போராட்ட வீரா் சந்திரசேகா் ஆசாதின் சிலைக்கு ஸ்மிருதி இரானி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT