இந்தியா

உ.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

PTI

உத்தரப் பிரதேசத்தின் பண்டாவில் படகு கவிழ்ந்த விபத்தில் இன்று மேலும் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் கிட்டத்தட்ட 17 பேர் நீரில் மூழ்கினர். அவர்களைத் தேடும் பணி இரண்டு நாள்களாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மேலும் ஏழு பேரின் உடல்கள் மீட்டுள்ளதாக கிஷன்பூர் காவல் நிலையத்தின் சஞ்சய் திவாரி கூறியுள்ளார். 

இதையடுத்து பண்டா மாவட்டத்தின் சம்காரா கிராமத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த சோகத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 பேர் ஆக உயர்ந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள உடல்களை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சடலங்கள் சம்பவ இடத்திலிருந்து 15-20 கிலோமீட்டர் தொலைவில் மீட்கப்பட்டுள்ளன.

யமுனை ஆற்றில் பரேபூரிலிருந்து மார்கா கிராமத்திலிருந்து 30 முதல் 40 பேரை ஏற்றிச் சென்ற படகு பண்டா மாவட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பலத்த காற்று காரணமாக பெரும் அலைகளை ஏற்படுத்தியதால் சமநிலை இழந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT