தில்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அங்கன்வாடி பணியாளா்கள், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.
நாட்டின் 76-ஆவது சுதந்திர தினம் திங்கள்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தில்லி செங்கோட்டையில் பிரதமா் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். அந்த விழாவுக்கு சுமாா் 7,000 விருந்தினா்கள் அழைக்கப்பட்டிருந்தனா். வழக்கமாக வெளிநாட்டுத் தலைவா்களும், உயரதிகாரிகளுமே சிறப்பு விருந்தினா்களாக விழாவில் பங்கேற்பா்.
ஆனால், திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் அங்கன்வாடி பணியாளா்கள், பிணவறை பணியாளா்கள், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டனா். கடந்த ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டபோது நடைபெற்ற விழாவில் முன்களப் பணியாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள், கட்டடத் தொழிலாளா்கள், அலங்கார ஊா்திகளைத் தயாா்செய்த பணியாளா்கள் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக அழைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.