இந்தியா

அரசு மானியங்கள் மற்றும் சேவைகளைப் பெற இனி ஆதார் எண் கட்டாயம்!

DIN


மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியங்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு இனி ஆதார் எண் கட்டாயம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. 

அரசு வழங்கும் மானியங்கள் மற்றும் சலுகைகளைப் பெறுபவர்களுக்கு ஆதார் விதிகளை கடுமையாக்கும் வகையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம்  மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. 

அந்த சுற்றறிக்கையின்படி, மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்களின் கீழ் மானியங்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு இனி ஆதார் எண் கட்டாயம் என்றும், ஆதார் வழங்கப்படாத சூழலில், நிரந்தர ஆதார் அட்டை பெரும்வரை ஆதார் பதிவு செய்த எண்ணைப் பயன்படுத்து சேவைகளைப் பெறலாம். ஆதார் எண் அல்லது பதிவுச் சீட்டு இல்லையென்றால், அரசாங்க மானியங்கள் மற்றும் பலன்களைப் பெற முடியாது.
 
நாட்டில் 99 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு தற்போது ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

SCROLL FOR NEXT