மத்தியப் பிரதேச அமைச்சர் துளசிராம் சிலாவத் சென்ற கார் சாலை விபத்தில் சிக்கியுள்ளது. நூலிழையில் அவர் குடும்பத்துடன் உயிர்த் தப்பியுள்ளார்.
அமைச்சர் தனது குடும்பத்துடன் போபாலுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, தேவாஸ் மாவட்டத்தில் அவரின் கார் மீது லாரி மோதியது. இந்த சம்பவம் செவ்வாய் இரவு 10 மணியளவில் நடைபெற்றுள்ளது.
அமைச்சரின் கார் மீது லாரி மோதியதால், வாகனத்தின் இடது பக்க கதவு சேதமடைந்தது. இந்த விபத்தில் அமைச்சரின் காரில் இருந்த அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர் என்று காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
விபத்தை ஏற்படுத்தி லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிலாவத் மாநில நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் இந்தூர் மாவட்டத்தில் உள்ள சான்வர் தொகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.