முகப்பு
இந்தியா

ஆவணி மாதப் பிறப்பு-சபரிமலையில் சிறப்பு பூஜைகள்: ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

ஆவணி மாதப் பிறப்பையொட்டி (மலையாள நாள்காட்டியின்படி சிங்கம் மாதம்), சபரிமலை ஐயப்பன் கோயிலில் புதன்கிழமை சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன. இதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:05 AM
சபரிமலையில் தரிசனம் செய்ய புதன்கிழமை குவிந்த பக்தா்கள்.
பகிர்:

ஆவணி மாதப் பிறப்பையொட்டி (மலையாள நாள்காட்டியின்படி சிங்கம் மாதம்), சபரிமலை ஐயப்பன் கோயிலில் புதன்கிழமை சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன. இதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

மாதாந்திர பூஜைகளுக்காக, சபரிமலை கோயில் நடை செவ்வாய்க்கிழமை மாலையில் திறக்கப்பட்டது. இதையடுத்து, 18 படிகள் வழியாக சென்று ஐயப்பனை தரிசிக்க பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

மாதப் பிறப்பு நாளான புதன்கிழமை அதிகாலை முதலே பக்தா்கள் வருகை அதிகம் காணப்பட்டது. ஐயப்பன் கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரு உடனிருக்க, மேல்சாந்தி என்.பரமேஸ்வரன் நம்பூதிரி கருவறை கதவுகளை திறந்து விளக்கேற்றினாா். அப்போது, பக்தா்களின் சரண கோஷம் கோயில் முழுவதும் எதிரொலித்தது. தொடா்ந்து, வழக்கமான பூஜைகளுடன் லட்சாா்ச்சனை வழிபாடும் நடைபெற்றது.

சபரிமலை கோயிலை நிா்வகிக்கும் திருவாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் தலைவா் கே.அனந்தகோபன், சபரிமலை சிறப்பு ஆணையா் மனோஜ் மற்றும் இதர வாரிய உறுப்பினா்கள் அதிகாலையில் தரிசனம் மேற்கொண்டனா்.

வரும் 21-ஆம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். இந்நாள்களில் உதயாஸ்தமன பூஜை, அஷ்டாபிஷேம், களபாபிஷேம், படிபூஜை ஆகியவை நடைபெறும். தரிசனத்துக்கு இணையவழி முன்பதிவு மூலம் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். நிலக்கல்லில் உடனடி பதிவு முறையும் செயல்பாட்டில் உள்ளது.

அடுத்த மாதம் 6-ஆம் தேதி ஓணம் பூஜைகளுக்காக கோயில் நடைதிறக்கப்பட்டு, 10-ஆம் தேதி நடை சாத்தப்படும் என்று தேவஸ்வம் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →