முஸாஃபர்நகர்: பிகார் மாநிலம் முஸாஃபர்நகர் மாவட்டத்தில் ஓடும் ரயிலில் கடத்திச் செல்லப்பட்ட 12 சிறுவர்களை ரயில்வே காவலர்கள் மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்மபூமி விரைவு ரயிலில், இந்த சிறுவர்களை உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வேலையில் ஈடுபடுத்த அழைத்துச் செல்லப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிக்க | அம்பானி வீடு இல்லை.. ஆர்டிஓ வீடு; மலைத்துப் போன அதிகாரிகள் (விடியோ)
ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே காவல் படை இணைந்து நடத்திய மீட்புப் பணியில் இச்சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
லூதியாணா, அமிருதசரஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆலைகளில் வேலை செய்ய இந்தச் சிறுவர்களை அழைத்துச் செல்வதை கைது செய்யப்பட்டவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.