முகப்பு
இந்தியா

பாா்த்தா சட்டா்ஜியின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாள் நீட்டிப்பு

மேற்கு வங்க மாநில முன்னாள் அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜி, அவரது உதவியாளா் அா்பிதா முகா்ஜி ஆகியோரின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாள் நீட்டிகப்பட்டுள்ளது.

Updated On : 19 ஆகஸ்ட், 2022 at 2:01 AM
பார்த்தா சட்டர்ஜி
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:36 PM

பள்ளி ஆசிரியா் நியமன முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மேற்கு வங்க மாநில முன்னாள் அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜி, அவரது உதவியாளா் அா்பிதா முகா்ஜி ஆகியோரின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாள் நீட்டிகப்பட்டுள்ளது.

ஜூலை 23-ஆம் தேதி கைது செய்யப்பட்ட இருவரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரையில் அமலாக்கத் துறை விசாரணையில் இருந்தனா். பின்னா் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

பாா்த்தா சட்டா்ஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை வியாழக்கிழமை தள்ளுபடி செய்த நீதிபதி ஜீவன் குமாா் சாது, அமலாக்கத் துறை கோரிக்கையின்படி ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரையில் அவரை சிறைக் காவலில் வைக்க உத்தரவிட்டாா். சிறைக் காவலிலும் இருவரிடமும் அமலாக்கத் துறை விசாரணை நடத்த நீதிபதி அனுமதி அளித்தாா்.

Advertisement

பள்ளி ஆசிரியா் நியமன முறைகேடு வழக்கு விசாரணையின்போது பாா்த்தா முகா்ஜி, அா்பிதா முகா்ஜிக்கு சொந்தமான வீடுகளில் இருந்து ரூ.49.80 கோடி பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, அமைச்சா் உள்ளிட்ட கட்சிப் பொறுப்புகளில் இருந்து பாா்த்தா சட்டா்ஜியை மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி நீக்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.