இந்தியா

துப்பாக்கி வைத்து விளையாடும்போது நிகழ்ந்த விபரீதம்: 10 வயது சிறுவன் பலி

ஆப்கனிஸ்தானில் துப்பாக்கி வைத்து விளையாடிய விளையாட்டு வினையாக மாறியுள்ளது. 

ANI

ஆப்கனிஸ்தானில் துப்பாக்கி வைத்து விளையாடிய விளையாட்டு வினையாக மாறியுள்ளது. 

வடக்கு  மாகாணமான பரியாப்பில் உள்ள கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஹஷ்டோமின் கிராமத்தில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

10 வயது முகமது நாடார், அப்துல் ரஹ்மான் (11) மற்றும் இரண்டு குழந்தைகளும் வீட்டில் கலாஷ்னிகோவ் ரகத் துப்பாக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். 

அப்போது, எதிர்பாராதவிதமாக 11 வயது சிறுவன் விளையாட்டாகத் துப்பாக்கியால் சுட்டதில் 10 வயது சிறுவன் பரிதாபமாகச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆப்கனில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்புப் பின்னால் உள்ள முக்கியக் காரணம் துப்பாக்கிகள், வெடிக்காத மோட்டார் குண்டுகள், வெடிபொருட்கள் போன்ற ஆயுதங்களால் விளையாடும் குழந்தைகள் பெரும்பாலும் பலியாகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT