சாலை மேம்பாலத்தில் ஆட்டோ ஓட்டியவர்: வைரலாகும் விடியோ 
இந்தியா

சாலை மேம்பாலத்தில் ஆட்டோ ஓட்டியவர்: வைரலாகும் விடியோ

சாலை மேம்பாலத்தில் ஆட்டோவை ஓட்டிச் சென்ற ஓட்டுநரின் விடியோ வைரலாகியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க காவல்துறையும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

DIN


மும்பை - ஆமதாபாத் நெடுஞ்சாலையைக் கடக்க சிரமமாக இருப்பதால், சாலை மேம்பாலத்தில் ஆட்டோவை ஓட்டிச் சென்ற ஓட்டுநரின் விடியோ வைரலாகியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க காவல்துறையும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டம் விரார் அருகே நெடுஞ்சாலையைக் கடப்பதற்கு, மக்கள் சாலையைக் கடக்க அமைக்கப்பட்ட மேம்பாலத்தில் சாதுர்யமாக ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார்.

படிகளில் ஆட்டோவை மேலே ஏற்றி, அடுத்தப் பாதையல் படிகட்டு வழியாக ஆட்டோவை இறக்கியுள்ளார்.

இந்த விடியோவுக்கு பல தரப்பிலிருந்தும் பரவலான கருத்துகள் எழுந்து வருகின்றன. சிலர் அவரது திறமையை பாராட்டியுள்ளனர். சிலர் தவறு என்று சுட்டிக்காட்டியுள்ளனர். எதுவாக இருந்தாலும் விடியோ வைரலாகிவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றைய மின்தடை

திருச்செந்தூரில் விஸ்வ பிரம்மா ஜெயந்தி

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நாளைய மின் தடை

கொம்மடிக்கோட்டை கல்லூரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

SCROLL FOR NEXT