மெஹபூபா முஃப்தி (கோப்புப் படம்) 
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் வெளிமாநிலத்தவர்கள் வாக்களிக்கக் கூடாது: தலைவர்கள் கருத்து

ஜம்மு - காஷ்மீரில் இனி வெளிமாநிலத்தவர்களும் வாக்களிக்கலாம் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் அதிருப்தித் தெரிவித்து வருகின்றனர்.

DIN

ஜம்மு - காஷ்மீரில் இனி வெளிமாநிலத்தவர்களும் வாக்களிக்கலாம் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் அதிருப்தித் தெரிவித்து வருகின்றனர்.

ஜம்மு - காஷ்மீரின் தலைமைத் தோ்தல் அதிகாரி ஹிருதேஷ் குமாா் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்து புதிய வாக்களர்களின் எண்ணிக்கையைப் பகிர்ந்துகொண்டார்.

அப்போது, ’ஜம்மு-காஷ்மீரில் தற்போது வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றோரின் எண்ணிக்கை 76 லட்சமாகும். தற்போது கூடுதலாக 20 முதல் 25 லட்சம் போ் வரை இறுதிப் பட்டியலில் இடம்பெற உள்ளதால், வாக்காளா்களின் மொத்த எண்ணிக்கை 98 லட்சத்தை எட்டும். வெளிமாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளர்கள், மாணவா்கள் மற்றும் ஊழியா்கள் ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும்பட்சத்தில், வாக்காளா் பட்டியலில் இணைந்து கொள்ளலாம். அவர்கள் இனி ஜம்மு - காஷ்மீரின் நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் இதர தேர்தல்களிலும் வாக்களிக்கலாம்’ எனத் தெரிவித்தார். 

இந்நிலையில், வெள்மாநிலத்தவர்கள் ஜம்மு - காஷ்மீரில் வாக்களிக்க வைக்கும் செயல் பாஜகவின் அரசியல் திட்டங்களில் ஒன்று என அம்மாநிலத்தில் உள்ள ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த அறிவிப்பிற்கு அதிருப்தித் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா  'ஜம்மு காஷ்மீரின் உண்மையான வாக்காளர்களின் ஆதரவு குறித்து பாஜக பாதுகாப்பற்றதாக உணர்கிறதா? இங்குள்ள இடங்களைக்  கைப்பற்ற தற்காலிக வாக்காளர்களை கொண்டுவர வேண்டுமா? ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு  வாக்குரிமையைப் பயன்படுத்த வாய்ப்பு அளிக்கப்படும்போது இவை எதுவும் பாஜகவுக்கு உதவாது’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியும், ‘ஜம்மு - காஷ்மீரில் தேர்தலை ஒத்திவைப்பதற்கான இந்திய அரசின் முடிவு, பாஜகவுக்கு ஆதரவாக உள்ளது. இப்போது வெளி மாநிலத்தவரை வாக்களிக்க அனுமதிப்பது தேர்தல் முடிவுகளை பாதிக்கும். உள்ளூர் மக்களை வலுவிழக்கச் செய்ய இரும்புக்கரம் கொண்டு ஆட்சியைத் தொடர்வதே இவர்களின் உண்மையான நோக்கம்’ எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT