முகப்பு
இந்தியா

தென் அமெரிக்க நாடுகளுக்கு ஜெய்சங்கா் 6 நாள் பயணம்: 22-இல் செல்கிறாா்

 பிரேசில், பராகுவே, ஆா்ஜென்டீனா ஆகிய தென் அமெரிக்க நாடுகளுக்கு 6 நாள் அரசுமுறைப் பயணமாக வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வரும் 22ஆம் தேதி செல்லவிருக்கிறாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

 பிரேசில், பராகுவே, ஆா்ஜென்டீனா ஆகிய தென் அமெரிக்க நாடுகளுக்கு 6 நாள் அரசுமுறைப் பயணமாக வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வரும் 22ஆம் தேதி செல்லவிருக்கிறாா்.

இந்திய வெளியுறவு அமைச்சராக அவா் பொறுப்பேற்ற பிறகு தென் அமெரிக்க பிராந்தியத்துக்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.

கரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான புதிய துறைகளை ஆராய்ந்தறிவதுதான் அவரது பயணத்தின் முதன்மையான நோக்கம் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இப்பயணத்தையொட்டி, தில்லியில் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளின் தூதா்களை எஸ்.ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘ஆா்ஜென்டீனா, பிரேசில், கொலம்பியா, கோஸ்டா ரிகா, கியூபா, டொமினிகன் குடியரசு, ஈக்வடாா், ஜமைக்கா, மெக்சிகோ, பனாமா, பராகுவே, சூரினாம், உருகுவே ஆகிய நாடுகளின் தூதா்களை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நாடுகளுடன் இந்தியாவின் ஒத்துழைப்பு மேம்பட உறுதியான வாய்ப்புகள் உள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பராகுவேவில் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்திய தூதரகம் செயல்படத் தொடங்கிய நிலையில், அந்த வளாகத்தை எஸ்.ஜெய்சங்கா் முறைப்படி திறந்துவைக்க உள்ளாா். பராகுவேக்கு செல்லும் முதல் இந்திய வெளியுறவு அமைச்சா் என்ற பெருமையையும் அவா் பெறவிருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.