இந்தியா

மிகப்பெரிய விசா முறைகேட்டைக் கண்டுபிடித்த காவல்துறை; 4 பேர் கைது

DIN


புது தில்லி: சர்வதேச அளவில் மிகப்பெரிய பாஸ்போர்ட் மற்றும் விசா முறைகேட்டில் ஈடுபட்டு வந்த நான்கு பேரை இந்திரா காந்தி விமான நிலைய காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

விமான நிலைய காவல்துறை டிசிபி தனு ஷர்மா கூறுகையில், அவர்களிடமிருந்து 325 போலி பாஸ்போர்ட் மற்றும் 175 போலி விசாக்கள் மற்றும் இதர ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறினார்.

இந்த போலி நிறுவனம் குறித்து காவல்துறைக்கக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய குற்றவாளி ஸாகிர் யூசுப் கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத்திலிருந்து குவைத்துக்குச் சென்ற இந்தியர் ஒருவர் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கும்பல் பிடிபட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT