முகப்பு
இந்தியா

ஒடிசாவில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி

ஒடிசாவில் கனமழையைத் தொடர்ந்து சுவர் இடிந்து விழுந்த சம்பவங்களில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பலியாகியுள்ளனர். 

Updated On : 20 ஆகஸ்ட், 2022 at 5:57 PM
பகிர்:


ஒடிசாவில் கனமழையைத் தொடர்ந்து சுவர் இடிந்து விழுந்த சம்பவங்களில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பலியாகியுள்ளனர். 

மயூர்பஞ்ச் மாவட்டத்தில் 2 பேரும், பாலசோர் மற்றும் கியோஞ்சர் மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்ததாக சிறப்பு நிவாரண ஆணையர் பி கே ஜெனா தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், 

Advertisement

கியோஞ்சர் மாவட்டத்தின் சதர் பிளாக்கில் உள்ள மகாதேஜோடா பஞ்சாயத்தில் உள்ள திகர்படா கிராமத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு பெண் உயிரிழந்தார், அவரது கணவர் படுகாயமடைந்தார்.

துத்திகா பெஹரா என்ற பெண், சம்பவ இடத்திலேயே இறந்தார், அவரது கணவர் கன்ஹு சரண் பெஹெரா, கிராம மக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பிஷோய் காவல் நிலையப் பகுதியில் உள்ள லோஹாகனி போலபெடா கிராமத்தில் 12 வயது நிஹாரிகா கிரி மற்றும் 5 வயது ஸ்வீட்டி கிரி என அடையாளம் காணப்பட்ட இரண்டு சகோதரிகள் இதேபோல் இறந்தனர்.

பாலசோர் மாவட்டத்தில் உள்ள பலியபாலா தொகுதியில் உள்ள மதுபுரா கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு மாணவர் இறந்தார், மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.