முகப்பு
இந்தியா

26/11 போன்ற தாக்குதல்: மும்பைக்கு வெளிநாட்டிலிருந்து வெடிகுண்டு மிரட்டல்

மும்பையில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ய சதித் திட்டம் நடந்து வருவதாக மும்பை போக்குவரத்துக் காவல்துறையின் இலவச உதவி எண்ணுக்கு, வெளிநாட்டிலிருந்து மிரட்டல் வந்துள்ளது.

Updated On : 20 ஆகஸ்ட், 2022 at 4:47 PM
கோப்புப்படம்
பகிர்:


மும்பை: மும்பையில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ய சதித் திட்டம் நடந்து வருவதாக மும்பை போக்குவரத்துக் காவல்துறையின் இலவச உதவி எண்ணுக்கு, வெளிநாட்டிலிருந்து மிரட்டல் வந்துள்ளது.

மும்பை போக்குவரத்துக் காவல்துறையின் உதவி எண்ணுக்கு வாட்ஸ்ஆப் மூலம் வந்த ஏராளமான மிரட்டல் செய்தியில், கடந்த 26/11 போன்ற தாக்குதல் நடத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், மிரட்டல் விடுக்கப்பட்ட எண் வெளிநாட்டைச் சேர்ந்தது என்பது மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு வாட்ஸ்ஆப்பில் அடுத்தடுத்து பல தகவல்கள் வந்துள்ளது, இந்த வெடிகுண்டு மிரட்டலில், ஆறு பேர் இந்த தாக்குதலை நடத்துவார்கள் என்றும், மும்பையை வெடிகுண்டு வைத்து வெடிக்கச் செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் 26/11 தாக்குதல் பலருக்கும் நினைவுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மும்பை காவல்துறையின் குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.