இந்தியா

மாநில அரசுகளுடன் இணைந்து பிரதமா் பணியாற்ற வேண்டும்: ராஜஸ்தான் முதல்வா் வலியுறுத்தல்

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த மாநில அரசுகளுடன் இணைந்து பிரதமா் நரேந்திர மோடி பணியாற்ற வேண்டும்

DIN

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த மாநில அரசுகளுடன் இணைந்து பிரதமா் நரேந்திர மோடி பணியாற்ற வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளாா்.

ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூரில் சனிக்கிழமை ராஜீவ் காந்தி நவீன தொழில்நுட்ப மையத்தை கெலாட் தொடங்கி வைத்தாா். கல்லூரி மாணவா்களுக்கு படிப்புடன் இணைந்து நவீன கணினி தொழில்நுட்பத்தையும் கற்றுத் தருவதே இந்த மையத்தின் நோக்கமாகும்.

தொடக்க நிகழ்ச்சியில் கெலாட் பேசியதாவது:

நாட்டின் இப்போதைய போக்கை நினைத்து நாம் கவலை கொள்ள வேண்டியுள்ளது. இதுபோன்ற அசாதாரண சூழல் இதற்கு முன்பு நமது நாட்டில் உருவானதில்லை. இப்போதைய நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த மாநில அரசுகளுடன் இணைந்து பிரதமா் மோடி பணியாற்ற வேண்டும். இதுவே அதற்கான சரியான தருணமாகும்.

மாநில அரசுக்கு அளிக்க வேண்டிய மானியங்களையும் நிதியையும் உரிய நேரத்தில் அளிப்பதும், மாநிலங்களுக்கு உரிய ஆதரவை அளிப்பதும் மத்திய அரசின் கடமை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!

குலசை தசரா: இன்று சூரசம்ஹாரம்!

திருப்பூர்: கட்டாய ஆள்குறைப்புக்குத் தள்ளப்படும் சிறு, குறு நிறுவனங்கள்

மத்தியப் பிரதேசம்: பாகிஸ்தான் கொடி அச்சிடப்பட்ட பலூன்கள் பறிமுதல்

மகளிர் உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

SCROLL FOR NEXT