கோப்புப்படம் 
இந்தியா

மாநிலங்களின் மின்பகிர்மானத்திற்கான நிலுவைத் தொகை ஒரே நாளில் 80% வசூல்

மாநிலங்களின் மின்பகிர்மானத்திற்கான கட்டண பாக்கி ஒரே நாளில் 80% வசூலாகியுள்ளது.

DIN

புதி தில்லி: மாநிலங்களின் மின்பகிர்மானத்திற்கான நிலுவைத் தொகை ஒரே நாளில் 80% வசூலாகியுள்ளது.

13 மாநிலங்களுக்கு இடையே மின்சாரத்தை  பகிர்ந்து கொள்ள ஆகஸ்ட் 18 இரவு முதல் மின்பகிர்மான அமைப்பு தடை விதித்திருந்தது.

தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், பீகார் உள்ளிட்ட 13 மாநிலங்கள் பிற மாநிலங்களுடன் மின்சாரத்தை விநியோகிக்கத தடை விதிக்கப்பட்டது

மின்உற்பத்தி நிறுனங்களுக்கு 13 மாநிலங்கள் நிலுவைத் தொகை செலுத்தவில்லை எனக்கூறி, மின்சாரத்தை வாங்க மற்றும் விற்க 13 மாநிலங்களுக்கு மின்பகிர்மான அமைப்பு தடைவிதித்தது.

13 மாநிலங்கள் மின்பகிர்மானத்திற்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தத் தவறியதாக, கொள்முதல் மற்றும் விற்பனைக்கு மின்பகிர்மான அமைப்பு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில்  மின்பகிர்மானத்திற்கான நிலுவைத் தொகை ஒரே நாளில் 80% வசூலாகியுள்ளது.   13 மாநிலங்களின் நிலுவைத் தொகை ரூ.5100 கோடியில் இருந்து ரூ.1037 கோடியாக குறைந்துள்ளது.

தடை அமலான ஓரே நாளில் பீகார், மணிப்பூர், ஜார்கண்ட், தெலுங்கானா போன்ற பல மாநிலங்கள் கட்டணம் செலுத்திவிட்டதால், உடனடியாக தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் ஆக.26-ல் தொடக்கம்

இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா்: டிரம்ப்பின் நெருங்கிய உதவியாளா்

தேவகோட்டை புவனேஸ்வரி அம்மனுக்கு பக்தா்கள் பால்குடம்

வீடு புகுந்து நகை, பணம் திருடிய இளைஞா் கைது

கஞ்சா விற்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT