இந்தியா

தில்லியில் விவசாயிகள் போராட்டம் தொடங்கியது

தில்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகளின் போராட்டம் தொடங்கியுள்ளது. 

DIN

தில்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகளின் போராட்டம் தொடங்கியுள்ளது. 

விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயக் கடன் தள்ளுபடி, உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து தில்லி ஜந்தர் மந்தரில் இன்று (திங்கள்கிழமை) விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்து நாடு முழுவதும் உள்ள விவசாய அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.   

அதன்படி நேற்று முதலே உத்தரபிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விவசாயிகள் தில்லி நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். 

விவசாயிகள் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளதையடுத்து தில்லி-மீரட் சாலை, காஸிப்பூர் எல்லை, சிங்கு எல்லை உள்ளிட்ட பகுதிகளை காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இதையடுத்து திட்டமிட்டபடி தில்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பே இந்த போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

SCROLL FOR NEXT