கோவாவில் என்ஜின் கோளாறு காரணமாக இண்டிகோ விமானத்தின் பயணம் நிறுத்தப்பட்டது. அந்த விமானம் மும்பை செல்லவிருந்தது.
கோவா விமான நிலையத்தில் இருந்து 4 குழந்தைகள் உள்பட 187 பயணிகளுடன் இண்டிகோ நிறுவன விமானம் ஒன்று செவ்வாய்க்கிழமை மும்பை புறப்பட்டது. அந்த விமானம் ஓடுதளத்தை நோக்கிச் சென்றபோது, விமானத்தின் வலது என்ஜினில் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தாா்.
இதையடுத்து அந்த விமானத்தின் பயணம் நிறுத்தப்பட்டது. அந்த விமான நிலையம் கடற்படை தளத்தின் பகுதி என்பதால், பயணிகளை கடற்படையினா் பத்திரமாக மீட்டனா் என்று விமான நிலைய இயக்குநா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.