இந்தியா

மகாராஷ்டிர பேரவையில் எதிர்க்கட்சிகள் போராட்டம்: சிவசேனை பங்கேற்பு

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வெளியே எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்தில் சிவசேனை எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றுள்ளனர்.

DIN

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வெளியே எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்தில் சிவசேனை எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றுள்ளனர்.

மகராஷ்டிரத்தில் பெய்த மழையால் பயிர்கள் சேதமடைந்த நிலையில், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி சட்டப்பேரவைக்கு வெளியே செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தை எதிர்க்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் நடத்தி வரும் நிலையில், உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த சிவசேனை எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவரும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான அஜித் பவார், சிவசேனையின் ஆதித்ய தாக்கரே உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் ஆட்சியிலிருந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கூட்டணி மீது சிவசேனையைச் சோ்ந்த ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி கொண்டதால் கட்சியில் பிளவு ஏற்பட்டது. சிவசேனையைச் சோ்ந்த 40 அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு அளித்ததால், பாஜகவுடன் இணைந்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சியை கைப்பற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

SCROLL FOR NEXT