இந்தியா

மொஹாலியில் நாளை புற்றுநோய் மருத்துவமனையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

பஞ்சாபின், மொஹாலி மாவட்டத்தில் ஹோமிபாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை ஆகஸ்ட் 24-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். 

DIN

பஞ்சாபின், மொஹாலி மாவட்டத்தில் ஹோமிபாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை ஆகஸ்ட் 24-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். 

மொஹாலியில் உள்ள முல்லன்பூருக்கு பிரதமர் வருகைக்காக பஞ்சாப் காவல்துறையால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

மத்திய அரசு அணு எரிசக்தித்துறை உதவியுடன் டாடா நினைவு மையத்தின் ரூ.600 கோடி நிதியுதவியால் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

ஹோமிபாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 300 படுக்கை வசதிகளுடன், அனைத்துவிதமான புற்றுநோய்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்கான அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை மற்றும் புற்றுநோய், கீமோ தெரபி, நோய் எதிர்ப்பு சிகிச்சை மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படவுள்ளன. 

சங்ரூரில் உள்ள 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை சிறப்பாக செயல்படுவது போல், இப்பகுதியில் புற்றுநோய் சிகிச்சைக்கான கேந்திரமாக இந்த மருத்துவமனை செயல்படும். 

இந்த மருத்துவமனை பஞ்சாப் மற்றும் அண்டை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய்க்கான சிகிச்சை கிடைக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்வை போதும்... ஃபெளசி!

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ரஷியா முடிவு?

விழியிரண்டும்... ராஷி சிங்!

ம.பி: கோயிலில் கூட்டநெரிசல்! 2 பெண் பக்தர்கள் பலி... 5 பேர் படுகாயம்!

ஆயிரம் ஃபாலோயர்ஸ் இல்லாதவர்களுக்கு நேரலை கிடையாது: இன்ஸ்டாகிராம் புதிய விதி!

SCROLL FOR NEXT